[X] Close

குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு உயர்வு: சென்னை மக்கள் நிம்மதி

Water-Reserves-In-Drinking-Water-Lakes--Chennai-People-s-Relief

கடந்த மாதத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கூடுதல் மழையால் சென்னை மாநகரின் குடிநீர் விநியோகத்துக்கு கூடுதலாக 15 நாட்களுக்குப் போதுமான நீர் கிடைத்திருப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement

கடும் குடிநீர் பஞ்சத்தை சென்னை எதிர்கொண்டிருந்த நிலையில், ஆகஸ்டில் சராசரியை விட 24 சதவிகிதம் கூடுதல் மழை பெய்ததால், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்ததாக அவர்கள் கூறினர். ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கூடுதல் மழை பெய்ததாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதனால் சென்னை மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close