Published : 01,Jul 2022 11:10 AM

`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்

India-registers-17-070-new-Covid-cases--death-toll-reaches-525-139

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.55 ஆக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 17,070 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பைக் காட்டிலும் சற்று குறைவாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,070 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 4,28,36,906 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 23 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 5,25,139 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

image

நாடு முழுவதும் தற்போது 1,07,189 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.55 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது. நாட்டில் கொரோனா பரவல் தினசரி சதவீதம் 3.40 ஆகவும், வாராந்திர சதவீதம் 3.59 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் நாட்டில் 11,67,503 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,97,74,71,041 டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள மத்திய அரசு விமான நிலையங்கள் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

செய்தியாளர்: விக்னேஷ் முத்து

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்