Published : 01,Jul 2022 08:04 AM
’புல்லட்டுப்பாண்டி வர வழில நின்னுட்டு’.. வலசையில் நின்றவரை ஒதுங்கச்செய்த யானையின் வீடியோ!

யானைகள் தொடர்பான வீடியோக்கள் சில நேரங்களில் மிரளவும் வைக்கும், சில சமயங்களில் ரசிக்கவும் வைக்கும். தற்போது ரசிக்க வைக்கக் கூடிய ஒரு வைரல் வீடியோ பற்றிதான் பார்க்க போகிறோம்.
தனது வலசையில் நபர் ஒருவர் நின்றுக் கொண்டிருக்க, ஒய்யாரமாக நடந்து வந்த யானை ஒன்று அந்த நபரின் பின்னால் நின்று ‘வழிய விடுங்க தம்பி’ என்ற பாணியில் தனது காலால் மண்ணை அவர் மீது இறைக்கிறது.
அந்த நபரோ என்னவென்று திரும்பி பார்த்தது அங்கு யானை இருந்ததை கண்டு அதிர்ந்துப்போய் எதிர்முனைக்கு செல்கிறார். ‘புல்லட்டு பாண்டி வர வழில நின்னுட்டு’ என்ற மைண்ட் வாய்ஸோடு யானையோ தனது வழியை நோக்கி செல்கிறது.
Loved the way he asked the man to move aside. Couldn't have been more polite than this. Animals are truly amazing.
— Rajesh Gupta (@Rajeshguptablog) June 30, 2022
வெறும் 22 நொடிகளே கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு நெட்டிசன்களால் ரசிக்கப்பட்டும் வருகிறது.
மேலும், ‘airpods போட்டு பாட்டு கேட்டால் யானையே பிளிறினாலும் கேக்காது’ என்றும், ‘வழியை விடச் சொல்லி இதை விட கண்ணியம் வேறு யாருக்கு இருக்கும்?’ என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் இலங்கையின் yala தேசிய பூங்கா அருகே நடந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: