Published : 27,Jun 2022 07:15 AM
`நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து எங்க மகளை மீட்டுக்கொடுங்க...’- பெற்றோர் கண்ணீர் புகார்

திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள தனது மகளை மீட்டு தரக்கோரி தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ நாகேஷ் - மாலா தம்பதியரின் மகளான வர்தினி என்பவர், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் நித்யானந்த ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். ஸ்ரீ நாகேஷும் மாலாவும் நித்யானந்தரின் சீடர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தனது மகளை நித்தியானந்தர் ஆசிரமத்தில் உள்ள நிர்வாகிகள் தங்களிடம் காண்பிக்க கூட மறுக்கிறார்கள் என்றுகூறி, அதனால் தங்கள் மகளை மீட்டு தருமாறு பெங்களூரு காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும் ஆசிரம நிர்வாகிகள் வர்தினியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி தற்போது இப்போது திருவண்ணாமலை ஆசிரமத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும், தங்கள் மகளை காவல்துறையினர் விரைந்து மீட்டு தரக்கோரி திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரின்பேரில் திருவண்ணாமலை காவல்துறையினர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தேடி வருகின்றனர்.
- செய்தியாளர்: கோவிந்தராஜூலு