Published : 23,Jun 2022 01:09 PM

ஜோஸ் பட்லரின் திட்டத்தை பின்பற்றினேன் - அரை சதம் கடந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி

Ranji-Trophy-2022-Final-Mumbai-opener-Yashasvi-Jaiswal-credits-tips-from-Jos-Buttler-for-success

மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார்.

பெங்களூருவில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை-மத்தியப் பிரதேச அணிகள் ஆடி வருகின்றன. நேற்று தொடங்கிய இப்போட்டியில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பிரித்வி ஷா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி சிறப்பான தொடக்கம் தந்தனர். நிலைத்து நின்று ஆடிய ஜெய்ஸ்வால் 78 ரன்னில் (163 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அனுபவ் அகர்வால் பந்து வீச்சில் வீழ்ந்தார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

image

இந்நிலையில், நடந்துமுடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகாக விளையாடியபோது, இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரிடம் இருந்து தனக்கு கிடைத்த டிப்ஸ்கள் பயனுள்ளதாக இருந்ததாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் நினைவுகூர்ந்தார். 'பந்தைப் பாருங்கள், நிலைமையைப் புரிந்துகொண்டு, நான் பின்பற்றுவதுபோல் நல்ல ஷாட்களை தேர்ந்தேடுத்து விளையாடுங்கள்' என ஐபிஎல் தொடரின்போது ஜோஸ் பட்லர் என்னிடம் கூறியதை செயல்படுத்தினேன். ரஞ்சிக் கோப்பையில் பிரித்வி ஷாவுடன் இணைந்து ஆடியபோது ஜோஸ் பட்லரின் இந்த திட்டத்தை பின்பற்றினேன்'' என யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறினார்.

இதையும் படிக்கலாம்: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த இலங்கை! ஒரு நாள் தொடரை வென்று அசத்தல்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்