[X] Close

மலையாள சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது: சொல்கிறார் பாவனா

Malayalam-cinema-is-full-of-grace--says-Bhavana

சித்திரம் பேசுதடி மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் பாவனா. வடிவேலுடன் இவர் சேர்ந்து நடித்த ‘ஸ்நேக்பாபு’காமெடி தாறுமாறாக பிரபலமானது. 

அஜித்துடன் அசல், ஜெயம் ரவியுடன் தீபாவளி என அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடிப்போட்டு அதிகம் பேச வைத்த ஹீரோயின் பாவனா. தீபாவளியில் யுவன் சங்கராஜா இசையில் இடம்பெற்ற ‘போகாதே..போகாதே’பாடல் பெரிய அளவுக்கு விரும்பமான பாடலாக தேர்வாகியிருந்தது. இப்படி பரபரப்பாக இருந்த பாவனாவுக்கு தமிழில் அதிக வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. சமீபத்தில் நடந்த செய்தியாளர்களிடம் பேசிய பாவனா “மலையாள சினிமா என்பதே ஆணாதிக்க மிகுந்த சினிமாதான். அங்கே ஆண்களை மையமாக வைத்தேதான் சினிமாவை உருவாக்குகிறார்கள். பெண்களுக்கு உரிய அங்கிகாரம் என்பது கிடைக்கவே இல்லை” என கருத்து தெரிவித்திருக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close