Published : 21,May 2022 07:10 PM

இ சாலா கப் கனவை நனவாக்குமா மும்பை? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

Will-Mumbai-make-ee-Sala-Cup-dream-come-true--Mumbai-Won-the-toss-and-choosing-to-bowl-against-Delhi-

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் ஏகோபித்த ஆதரவுடன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

RCB's Twitter Account Unveils 'New' Logo to Support MI, Trolls Say 'DC Wear Blue Too'

5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 3 வெற்றி, 10 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் ரேஸில் இருந்து ஏற்கனவே வெளியேறியுள்ள மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற கடுமையாக போராடும். மேலும், அடுத்த ஐபிஎல் சீசனுக்காவது அணியை வலுப்படுத்தும் வகையில் இழந்த ஃபார்மை மீட்டெடுக்க மும்பை வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

IPL 2022: Big blow for Mumbai Indians as key batter ruled out of opener vs Delhi Capitals

மறுபுறம், டெல்லி அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 5ஆம் இடத்தில் உள்ளது. இந்த ஆட்டம் டெல்லி அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டம் ஆகும். இன்றைய ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளை எட்டுவதுடன் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். ஏனெனில் ஏற்கனவே 16 புள்ளிகளுடன் இருக்கும் பெங்களூரு அணியின் ரன் ரேட்டை விட டெல்லி அணியின் ரன் ரேட் உயர்வாக இருக்கிறது.

IPL 2022: Delhi Capitals' Match vs Punjab Kings Shifted From Pune To Mumbai Due To Covid Cases In DC Camp | Cricket News

மாறாக டெல்லி தோல்வியை சந்தித்தால் லீக் போட்டிகளோடு நடையை கட்ட வேண்டியதுதான். அதேநேரத்தில் பெங்களூரு அணிக்கு அதிர்ஷ்டம் அடித்து பிளே ஆஃப் சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும். முந்தைய இரு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் டெல்லி இன்று களமிறங்குகிறது. இந்த ஆட்டத்தின் முடிவுக்காக டெல்லி மட்டுமின்றி ஆர்சிபி அணியின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்