Published : 16,May 2022 10:32 AM

ஐபிஎல்: 'ப்ளே ஆஃப்' வாய்ப்பு யாருக்கு? டெல்லி - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

Punjab-Kings-VS-Delhi-Capitals-today-ipl-match-preview

இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. இதில் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடக்கும் 64-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

image

டெல்லி அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் தலா 6 வெற்றி, தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5ஆம் இடத்தில் உள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றி பெற்ற உத்வேகத்துடன் டெல்லி இன்று களமிறங்குகிறது.

இன்றைய ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெறும் பட்சத்தில் 14 புள்ளிகள் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் பெங்களூர் அணியை முந்தி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறும். எனவே பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கும் முனைப்பில் டெல்லி அணி இன்று கவனமாக விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் டேவிட் வார்னர் (427 ரன்கள்) கலக்குகிறார். ரிஷப் பண்ட் , ரோவ்மேன் பாவெல் ஒத்துழைப்பு தந்தால் நல்ல ஸ்கோரை பெறலாம். பிருத்வி ஷா இல்லாதது பெரும் பின்னடைவாக இருக்கும். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் (18 விக்கெட்டுகள்), கலீல் அகமது (16 விக்கெட்டுகள்) பலம் சேர்க்கிறார்கள்.

image

மறுபுறம், பஞ்சாப் அணியும் இந்த தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் தலா 6 வெற்றி, தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் 7-ஆம் இடத்தில் உள்ளது. பெங்களூர் அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 209 ரன்கள் குவித்து 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது பஞ்சாப். அந்த உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். பேட்டிங்கில் ஷிகர் தவான் (402 ரன்கள்), லியாம் லிவிங்ஸ்டோன் (385 ரன்கள்) சிறப்பான நிலையில் உள்ளனர். கேப்டன்  மயங்க் அகர்வால், பானுகா ராஜபக்சே, ஜானி பேர்ஸ்டோ எழுச்சி பெற வேண்டும். பந்துவீச்சில் ககிசோ ரபாடா (21 விக்கெட்டுகள்), ராகுல் சாஹர் (14 விக்கெட்டுகள்) மிரட்டுகின்றனர்.

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கெனவே மோதிய ஆட்டத்தில் டெல்லி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.  

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

டெல்லி: 1.டேவிட் வார்னர், 2.பிருத்வி ஷா/கேஎஸ் பாரத், 3.மிட்செல் மார்ஷ், 4.ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 5.ரோவ்மன் பவல், 6.லலித் யாதவ், 7.அக்சர் படேல், 8.ஷர்துல் தாக்கூர், 9.குல்தீப் யாதவ், 10.அன்ரிச் நார்ட், 11.சேத்தன் சகாரியா

பஞ்சாப்: 1.ஷிகர் தவான், 2.ஜானி பேர்ஸ்டோ, 3.பானுகா ராஜபக்சே, 4.லியாம் லிவிங்ஸ்டோன், 5.மயங்க் அகர்வால் (கேப்டன்), 6.ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), 7.ரிஷி தவான், 8.ஹர்பிரீத் பிரார், 9.ககிசோ ரபாடா, 10.ராகுல் சாஹர், 11.அர்ஷ்தீப் சிங்

இதையும் படிக்கலாம்: சிஎஸ்கே அற்ற சிஎஸ்கே - 'கம்பேக்' பற்றி தோனி உறுதியளிப்பாரா?

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்