Published : 09,Sep 2017 05:13 PM
வேண்டாம் ப்ளுவேல் விளையாட்டு..! மாட்டுவண்டியில் பள்ளி சிறுவர்கள் பேரணி

உயிரைப் பறிக்கும் ப்ளுவேல் விளையாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை புளியந்தோப்பில் பள்ளி சிறுவர்களின் பேரணி நடைபெற்றது.
தனியார் பள்ளி சிறுவர்கள் மாட்டுவண்டியில் அமர்ந்து ஊர்வலமாக வந்த பேரணியை புளியந்தோப்பு காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக தொடங்கிய பேரணி, மோதிலால் தெரு, டிமலஸ் ரோடு உள்ளிட்டவை வழியாகச் சென்று பள்ளியை வந்தடைந்தது. பேரணியின்போது ப்ளுவேல் விளையாட்டின் தீமைகள் குறித்த பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் சென்றனர்.