Published : 09,Sep 2017 03:30 AM

அருண் ஜெட்லி தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

21st-GST-Council-meet-in-Hyderabad

ஜிஎஸ்டி தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்த ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற உள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக உள்ள சில சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் எனத் தெரிகிறது. இது தவிர ஜிஎஸ்டி-யின் வலைத்தளத்தில் உள்ள தொழில்நுட்பக்கோளாறுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. ஜிஎஸ்டி வரியை தவிர்ப்பதற்காக நிறுவனங்கள் தங்கள் பதிவை திரும்பப் பெற்று வரும் நிலையில் இதற்கான நடைமுறையை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்