Published : 07,May 2022 06:51 AM
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு- எவ்வளவு தெரியுமா?

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்து 1,015ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, மார்ச் மாதத்தில் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.965ஆக இருந்தது.
இந்நிலையில் இந்த மாதம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,000ஐ தாண்டியுள்ளது. மே மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்து 1,015ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிகரித்து வருவது நடுத்தர மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.