[X] Close

திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும்: மு.க.ஸ்டாலின்

The-public-meeting-will-be-planned-as-planned--MK-Stalin

திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருச்சியில் இன்று நடைபெறவிருந்த திமுக பொதுக்கூட்டத்திற்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.  இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் ’திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும். பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தார். 


நீட் தேர்வுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்திற்கும் அனுமதி கிடையாது என உச்சநீதிமன்றம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், திருச்சி மாநகர காவல்துறை திமுக பொதுக்கூட்டதிற்கு திடீரென அனுமதி மறுத்திருந்தது. பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டு திடீரென்று காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் தடையை மீறி பொதுக்கூட்டம் தொடங்கியது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close