Published : 27,Apr 2022 03:42 PM
10 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய்க்கு பிரியாவிடை! வீடியோ வைரல்!

பத்தாண்டுகளாக காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய்க்கு உத்தரப் பிரதேச போலீசார் பிரியாவிடை அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘எங்கள் விகானுக்கு பிரியாவிடை’என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மொராதாபாத் காவல் நிலைய காவலர்கள் “விகான்” என்ற மோப்ப நாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையில் அங்கம் வகித்த நாயின் சில படங்களும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
"Farewell to our V(icon)"
— UP POLICE (@Uppolice) April 25, 2022
With moist eyes & nostalgia, we remember the ‘pawsome’ contribution of Vicon, our explosive sniffer officer at Moradabad, who kept his ‘nose to the grindstone’ for more than a decade.
Jai Hind!#RestInPeace!#K9pic.twitter.com/Nf5NlWvVGu
அந்த ட்விட்டர் பதிவில் “எங்கள் விகானுக்கு பிரியாவிடை! ஈரமான கண்களுடனும் ஏக்கத்துடனும், மொராதாபாத்தில் எங்கள் வெடிமருந்து மோப்ப அதிகாரியான விகானின் பங்களிப்பை நாங்கள் என்றும் நினைவில் வைத்திருப்போம். அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தன் மோப்பசக்தியின் மூலம் சேவையாற்றியது விகான். ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டனர்.