Published : 17,Apr 2022 05:42 PM
`Sing in the Rain' பாடலை மீள் உருவாக்கம் செய்து நெகிழ்ந்த வடிவேலு - பிரபுதேவா! #ViralVideo

நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா, நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவையாகப் பாடி விளையாடும் கலகலப்பான வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில், லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கும் படம் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போதைக்கு வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஒரு பாடலை வடிவேலு பாடவுள்ளதாக கூறப்படுகிறது.
`நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு பாடவுள்ள பாடலுக்கு நடனப் பயிற்சி அளிக்க நடிகர் பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு - பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மேலும் இப்பாடலில் பிரபுதேவா ஒரு காட்சியில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவர் கூட்டணியில் ஏற்கெனவே பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் மறக்க முடியாத திரைப்படம் 2001-ம் ஆண்டில் வெளிவந்த `மனதை திருடிவிட்டாய்’ படம். இதில் வந்த சிங் இன் தி ரெயின் பாடலைத்தான் தற்போது மீண்டும் மீள் உருவாக்கம் செய்துள்ளனர் இருவரும்.
இந்த வீடியோவில், `மனதை திருடிவிட்டாய்’ படத்தில் இடம்பெற்ற வடிவேலு பாடிய 'சிங் இன் தி ரெயின்' பாடலை மீண்டும் அவரே பாடுகிறார். இறுதியில் இருவரும் கட்டியணைத்துக்கொள்கின்றனர்.
Natpu ❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/BCVJRixz9S
— Prabhudheva (@PDdancing) April 17, 2022
கடந்த கால நினைவுகளை பகிரும் வகையிலான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை வடிவேலு மட்டுமன்றி, 'நட்பு' என்று கேப்ஷனுடன் பிரபுதேவாவும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய செய்தி:மா இலைகளில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்த திருச்சி அரசுப் பள்ளி ஆசிரியை