[X] Close

அனிதா பயின்ற பள்ளி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Anitha-s-school-mates-protesting-in-Ariyalur

மாணவி அனிதாவின் சொந்த கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, அனிதா படித்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலின் அதிகாரத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் அனிதா படித்த பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் கிராம மக்கள் அக்கிராமத்திலேயே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினம் ஒரு போராட்டம் தொடரும் என கிராம இளைஞா்கள் தெரிவித்தனா். இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனா்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close