ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாலையோர பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டதில், மருத்துவ கல்லூரி மாணவர் பலியானார். சக மாணவி படுகாயம் அடைந்தார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சவேரியார்பட்டிணம் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு கார் நேற்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவியான கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி (22) என்பவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு காரை ஓட்டிவந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சக மருத்துவக் கல்லூரி மாணவரான திருச்சியைச் சேர்ந்த அஜீத் மித்திலேஸ் (25) என்பவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்துவந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து காட்சிகள் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்