சென்னையில் அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
கடந்த 24-ம் தேதி துபாய் மற்றும் அபுதாபிக்கு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாட்கள் அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். துபாயில் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொண்டு தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார். பின்னர், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.
இதன் பின்னர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர், தமிழகத்திற்கு வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அபுதாபியிலும், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. 4 நாள் பயணத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு துபாயில் இருந்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை பெருங்குடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். 8.3 லட்சம் சதுர அடி பரப்பளவில், 18 தளங்களுடன் 6 ஆயிரம் பணியாளர்களை உள்ளடக்கிய அமேசான் நிறுவனத்தின் நான்காவது அலுவலகம் இதுவாகும்.
இதன் மூலம் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது மட்டுமன்றி அமேசான் நிறுவனத்தின், மின் உபகரணங்களை உற்பத்தி செய்யும் மையம் ஒன்றும் சென்னையில் செயல்பட்டுகிறது. இந்தியாவிலயே அமேசானின் 2-வது பெரிய அலுவலகம் என்றால், ஹைதராபாத்திற்கு அடுத்து சென்னையில் உள்ள இந்த அலுவலகம் தான்.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix