Published : 19,Mar 2022 10:44 PM

உக்ரைன் குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி அறிவித்த பெடரர்.. எவ்வளவு டாலர்கள் தெரியுமா?

Federer-donates-5-lakh-dollar-to-ukraine-children-education

ரஷ்யா போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடர பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரெர் 5 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட சமூக உதவிகளுக்காக ‘ரோஜர் ஃபெடரர் ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் நாடுகளில் உள்ள குழந்தைகளின் கல்விக்காக இந்த தொண்டு நிறுவனம் மூலம் அவர் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் அந்நாட்டில் உள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ரோஜர் ஃபெடரர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

Roger Federer's Foundation Is Shaping Children's Futures - BORGEN

இது குறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உக்ரைனில் இருந்து வெளிவரும் புகைப்படங்களைப் பார்த்து தானும், தனது குடும்பத்தினரும் பேரதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் குழந்தைகள் கல்வியைத் தொடர தனது தொண்டு நிறுவனம் மூலம் 5 லட்சம் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் 3.79 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்