Published : 01,Mar 2022 04:07 PM

“போரில் இருந்து பின்வாங்கப்போவதில்லை; இலக்கை அடையும் வரை தொடரும்” - ரஷ்யா திட்டவட்டம்

will-not-back-down-from-the-war--Russia-confirms

ரஷ்யா போரை தொடரும், அதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷோய்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 120 மணி நேரத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா இடைவெளியின்றி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்யா.

இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக பேசியுள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷோய்கு, “ரஷ்யா போரை தொடரும், அதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. மேற்குநாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை உக்ரைன் மீது போர் தொடரும்” என்று கூறினார்.

image

மேலும், "உக்ரைனை இராணுவமயமாக்கல் மற்றும் நாஸிமயமாவதில் தடுப்பதையும், மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட இராணுவ அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே எல்லா இலக்குகளையும்’ அடையும் வரை உக்ரைன் தாக்குதலை ரஷ்யா தொடரும்" என தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்