நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் குறித்த அப்பேட்டை படக்குழு அதிகாரபூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
‘பசங்க 2’ படத்திற்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில், தமிழ் திரையிலகின் முன்னணி நடிகரான சூர்யா இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் சூரி, வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வரும் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
#ETteaser is releasing on Feb18th at 6 PM!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #EtharkkumThunindhavan #ETteaserFromFeb18th pic.twitter.com/zbE7vKOQci — Sun Pictures (@sunpictures) February 16, 2022
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix