Published : 08,Feb 2022 04:47 PM
ஹிஜாப் எதிர்ப்பு விவகாரம் - கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை

கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடகா முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவி நிற துண்டணிந்து மாணவர்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் அசாதாரணமான சூழல் நிலவுவதால் விடுமுறை அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.