Published : 31,Jan 2022 03:57 PM
"இது தான் திமுகவில் பெண்களுக்கு தரும் மரியாதையா?" - ஜோதிமணி எம்.பி ஆவேசம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்த தன்னை திமுகவினர் வெளியேற்றிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
#Karur MP #Jothimani of #Congress walks out from the Karur #DMK office today after a #dispute broke out between the #MP & DMK cadres in regards to #ward allocation in the upcoming urban #local_body#election.
— Aravind Raj (@airwindraj) January 31, 2022
meeting was led by minister #Senthil_Balaji@xpresstn@NewIndianXpresspic.twitter.com/YCp0B6m4KO
இதனால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி இதுபற்றி கேட்டதாகவும், அதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுகவினர் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து வெளியே வந்த ஜோதிமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தன்னை வெளியேற சொல்வது தான் திமுகவின் கூட்டணி தர்மமா இது தான் திமுகவில் பெண்களுக்கு தரும் மரியாதையா? என ஆவேசமாக குரல் எழுப்பினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அந்த காட்சியை படம்பிடிக்க முயன்றபோது திமுகவினர் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.