தமிழகம் முழுவதும் டெங்கு நோய் பரவி வரும் நிலையில், காவிரியாற்றில் இருந்து தேங்கி நிற்கும் மாசடைந்த தண்ணீரை குடிநீர் வடிகால் வாரியம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையின் அடிவயிற்று பகுதியில் இருந்து கொளத்தூர் பகுதி மற்றும் அதன் 40 வழியிடை கிராமங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் நிதி உதவியுடன் குடிநீர் வடிகால் வாரியமும், இணைந்து நீரேற்று திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஓடும் காவிரி கரையோரத்தில் இந்த நேரேற்று திட்டம் இருந்தாலும், பொதுமக்களுக்கு என்னவோ தேங்கிய மாசடைந்த நீரைத்தான் விநியோகம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் டெங்கு நோய் தாக்குதலுக்கு ஏராளமான குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மடிந்து வரும் நிலையில் கொளத்தூர் பகுதியிலும் கோவிந்தபாடி, தண்டா, கோட்டையூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் டெங்கு பாதிப்பு காரணமாக குழந்தைகள் இறந்துள்ளனர். இந்நிலையில் கொளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் வசிப்பவர்களுக்கு மாசடைந்த தேங்கி நிற்கும் குட்டை நீரை விநியோகம் செய்வதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் இந்த நீரேற்று திட்டத்தின் மூலமாக விநியோகம் செய்யும் குடிநீரால் நோய் பரவும் ஆபத்து இருப்பதால், அப்பகுதி மக்களிடமிருந்து சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இந்த தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் காவிரி ஆறுக்கு வரும் பொதுமக்கள் பரிதாபத்தோடு பார்த்து செல்கின்றனர். இந்த நிலை மாறி ஓடும் காவிரியில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்தப்படுத்தி கொளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!