Published : 17,Jan 2022 07:19 PM
“பிரதர்! அடுத்த தலைமுறையினரின் கேப்டன் நீங்கள்” - கோலி குறித்து பாக்.வீரர் முகமது அமீர்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள கோலிக்கு ட்வீட் மூலம் பிரியமான விடை கொடுத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகி உள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் கோலிக்கு தனியிடம் உண்டு. அதை யாரும் மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.
@imVkohli brother for me u are a true leader of upcoming generation in cricket because u are inspiration for young Cricketers. keep rocking on and of the field. pic.twitter.com/0ayJoaCC3k
— Mohammad Amir (@iamamirofficial) January 15, 2022
அமீரின் அந்த ட்வீட் தற்போது வைரலாகி உள்ளது. அது நெட்டிசன்களின் மனதையும் வென்றுள்ளது. அப்படி என்ன சொன்னார் அமீர்.
“பிரதர், என்னைப் பொறுத்தவரை நீங்கள் கிரிக்கெட்டில் அடுத்த தலைமுறையினரின் மெய்யான கேப்டன். ஏனென்றால் நீங்கள் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷன் தருகிறீர்கள். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் விளையாடிக் கொண்டே இருங்கள்” என தெரிவித்துள்ளார்.
அதோடு அந்த ட்வீட்டில் கோலியுடன் தான் இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார் அமீர். அதோடு கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.