[X] Close

பார்சிலோனா அணி வெற்றி: 2 கோல்கள் அடித்து அசத்திய மெஸ்ஸி

alaves-0-2-barcelona-messi-misses-a-penalty-then-strikes-twice

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஆலவேஸ் அணியுடனான ஆட்டத்தில் பார்சிலோனா அணி இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும் அடித்தார்.


Advertisement

ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான லா லிகா தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முன்னணி கிளப்பான பார்சிலானா, டெபோர்டிவோ அலெவ்ஸ் அணியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே பார்சிலோனா அணி சிறப்பாக விளையாடியது. முதல் பாதி நேரத்தின்போது அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பார்சிலோனா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் மெஸ்சி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 55-வது நிமிடத்திலும், 66-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்காததால் பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்றது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close