நெல்லை மாவட்டம் பணகுடி அருகே அரசு ஒப்பந்ததாரர் எனக்கூறி நண்பனிடம் பல லட்சம் மோசடி செய்ததாக இருவர், காவல்துறையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணற்றை சேர்ந்தவர் எட்வின்தாஸ். இவர் வெளிநாட்டில் அச்சு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய பள்ளி நண்பர்கள் வடக்கன்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ் லால் மற்றும் குமரேசன் லால். இவர்கள் இருவரும் அரியலூரில் அரசு ஒப்பந்ததாரராக உள்ளதாகவும் அங்கு கட்டிட பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதற்கு முதல் கட்டமாக 28 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்றும் எட்வின் தாஸிடம் கூறியுள்ளனர். அந்தப் பணத்தை 2 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கூறி வங்கி மூலம் கடன் பெற்றுள்ளனர்.
ஆனால் 2 மாதங்கள் கடந்தும் பணம் திருப்பி கொடுக்கவில்லை என்றும், போன் செய்தால் போனை எடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் எட்வின்தாஸ் இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பணகுடி போலீசார் மோசடி, மிரட்டல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ் லால் மற்றும் குமரேசன் லால் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்புடைய செய்தி: மதுரவாயல்: லாரி ஏறி தந்தை கண்முன்னே இரண்டு மகன்களும் உயிரிழந்த பரிதாபம்
Loading More post
காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை
“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” - சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்.. நகர மறுத்து அடம்பிடித்த ரூபாலி யானை.. நெகிழ்ச்சி சம்பவம்
டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ் தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!