Published : 07,Jan 2022 01:54 PM

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸில் 30 பேருக்கு கொரோனா

30-tested-corona-positive-in-Chrompet-Saravana-Stores

சென்னை குரோம்பேட்டையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸில் சுமார் 250 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 30 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பஞ்சாப்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் 'எஸ்கேப்'

ஏற்கெனவே சென்னை குரோம்பேட்டை ஐ.எம்.டி கல்வி நிறுவனத்தில் 60 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி இருந்தது. அதற்குமுன்பே 81 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 90% பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் தென்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்