Published : 06,Jan 2022 02:30 PM
ஜோகன்னஸ்பெர்க் டெஸ்ட்: மழையால் 4-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில், இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 240 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது.
தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு