காவலர் ஓட்டிவந்த கார் மோதி வீட்டின் முன்பு அமர்ந்திருந்த முதியவர் பலியான சம்பவ்த்தில், காவலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்தவர் கொத்தனார் சங்கர் (65). இன்று விருகம்பாக்கம் தேவி கருமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள பச்சையம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது அன்னதானம் பெற்றுக் கொண்ட சங்கர் வீட்டின் முன்பு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் சங்கர் மீது மோதியது. இதில் சங்கர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை முற்றுகையிட்டு நின்று கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (32) என்பது தெரியவந்தது.
முதல்நிலை காவலரான இவர், சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையரின் பாதுகாப்பு காவலராக தற்போது பணியாற்றி வருகிறார். நண்பரின் காரை வாங்கிக் கொண்டு சென்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து காவலர் ரஞ்சித் குமாரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் அன்னதானம் வழங்கியபோது சிறுவர்கள் காருக்கு குறுக்கே வந்ததால் திருப்பியபோதுதான் விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்