Published : 24,Aug 2017 03:52 AM

’விவேகம்’ அஜித்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

Kamal-praises-Vivegam-team

அஜித்குமார், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள ’விவேகம்’  படம், இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமிழகம் முழுவதும் நல்ல ஓபனிங். ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் மகள் அக்‌ஷரா ஹாசனுடன் ’விவேகம்’ படத்தை பார்த்து வருவதாக, நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுபற்றி அவர் டிவிட்டரில், ’அக்‌ஷராவுடன் விவேகம் படத்தை பார்த்துவருகிறேன். நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்