அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படம் நாளை உலகம் முழுக்க வெளியாகிறது. படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்தோடு தயாராகி வருகிறார்கள். அதேநேரத்தில் பலமடங்கு அதிக விலைக்கு டிக்கெட்கள் விற்கப்படுவதாக புகார்களும் எழுந்துள்ளன.
வீரம், வேதாளம், திரைப்படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விவேகம். 110 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த திரைப்படம் தமிழகத்தில் நாளை 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை சிறப்புக் காட்சிகள் திரையிடுவது வழக்கம். விவேகம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைக் காண ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள் 800 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலை கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர்.
மேலும் கள்ளச்சந்தையிலும் விவேகம் டிக்கெட் விற்கப்படும் நிலை உள்ளது. டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்தாலும், தங்கள் ஆதர்ச நடிகரின் படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிக விலைக்கு ரசிகர்கள் டிக்கெட் வாங்கிச் செல்கின்றனர். அதேநேரம், திரையுலகில் ‘மிஸ்டர் க்ளீன்’ என்ற இமேஜோடு வலம் வரும் நடிகர் அஜித், இதுமாதிரியான முறைகேடுகள் நடப்பதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!