[X] Close

ஏர் இந்தியா ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்ற தடை - சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு

madras-High-Court-has-ordered-a-ban-on-the-eviction-of-Air-India-employees-to-be-sold-to-Tata
டாடா நிறுவனத்துக்கு விற்கப்பட உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்ற தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு வழங்க தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை வாங்கும் டாடா நிறுவனம், தற்போதைய ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளுமா என சந்தேகம் எழுவதாகவும், ஏர் இந்தியா நிறுவன குடியிருப்புகளை காலி செய்வது பற்றி ஊழியர்களிடம் உத்தரவாதம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
image
வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ஏர் இந்தியா நிறுவன குடியிருப்புகளில் வசிக்கும் ஊழியர்களை வெளியேற்றவும், மருத்துவ சலுகைகளை நிறுத்தவும் தடை விதித்து உத்தரவிட்டார். மனுவுக்கு ஜனவரி 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க, மத்திய அரசுக்கும் ஏர் இந்தியா மற்றும் டாடா நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டார்.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close