நடிகர் அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தில் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டியும் நடிகர் கதிரின் அப்பா லோகுவும் இணைந்திருக்கிறார்கள்.
'திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படங்களுக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் அர்ஜுனுடன் புதிய க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. அருள்குமார் தயாரிக்க தினேஷ் லக்ஷ்மணன் இப்படத்தை இயக்குகிறார். இந்த நிலையில், படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்ததாக சமீபத்தில் படக்குழுவினர் உற்சாகமுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டியும், நடிகர் கதிரின் தந்தை லோகு ரெட்டியும் இணைந்திருக்கிறார்கள். விஷால் அப்பா ஜி.கே ரெட்டி நடிகர் அர்ஜூனின் தந்தையாக நடிக்கிறார். நடிகர் கதிர் அப்பா லோகு, படத்தில் கதையின் திருப்புமுனைக்கு உதவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide