Published : 13,Nov 2021 11:31 AM

விஜய்-லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விஜய் 67’ படத்தை தயாரிக்கும் தாணு?

actor-vijay-and-director-lokesh-kanagaraj-joints-vijay67-movie-To-be-Produced-by-Kalaipuli-S-Thanu

லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணையும் ‘விஜய் 67’ படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய்யின் 64 வது படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பெரும் பட்டாளமே நடித்திருந்தனர். கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ வெளியானது. கொரோனா சூழலிலும் தியேட்டர்களில் வெளியான படங்களில் ‘மாஸ்டர்’ மட்டுமே வசூலைக் குவித்ததாக கூறப்படுகிறது.

image

‘மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வம்சி பைடிப்பள்ளியுடன் ‘விஜய் 66’ படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படங்கள் முடிந்தபிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் வெற்றிக்கூட்டணி மீண்டும் ‘விஜய் 67’ படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்