[X] Close

ஆன்லைன் மூலம் விநியோகமாகும் ஆடைகளின் பார்சல்களில் கொரோனா பரவுகிறதா? - சீனா சந்தேகம்

உலகம்

China-Suspects-COVID19-spreads-through-parcels-from-a-delivery-company-that-distributes-clothing-which-was-ordered-through-online

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறையாத நிலையில் சீனாவில் ஆன்லைன் மூலம் ஆடைகளை விநியோகிக்கும் டெலிவரி நிறுவனத்தின் பார்சல்களில் கொரோனா பவுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அண்மையில் அந்த நாட்டில் ஆன்லைன் மெகா விற்பனை திருவிழா நடைபெற்றுள்ளது. தள்ளுபடி காரணமாக பல நிறுவனங்களுக்கும் ஆர்டர்களை குவித்துள்ளது. 

image

இந்நிலையில், வட சீனாவில் உள்ள ஹெபேய் மாகாணத்தில் இயங்கி வரும் குழந்தைகள் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த ஆடை உற்பத்தி நிலையத்தில் ஆடையை ஆர்டர் செய்த நபர்கள், அந்த பார்சலை கொண்டு சென்றவர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை? கண்டறிய சோதனை நடத்தப்பட உள்ளது. இது கொரோனா சார்ந்த தொற்று பரவலுக்கான சங்கிலியாக இருக்கலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Advertisement

இதே போல ஹெபேய் மாகாணத்தில் 300-க்கும் மேற்பட்ட பார்சல்களில் கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை அறிய அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். மேலும் தொற்று பரவலை தடுக்க சில நகரங்களில் பார்சல் டெலிவரியை தற்காலிமாக மாகாண அரசு முடக்கி வைத்துள்ளது. 

பார்சலை பெறும் போதும், பிரிக்கின்ற போதும் கையில் கையுறை மற்றும் முகத்தில் முகக்கவசம் அணிவதை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அந்த நாட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்து போன உணவுகளில் கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதையும் சீனா பரிசோதனை செய்திருந்தது. தங்கள் நாட்டில் கொரோனா தொற்றை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரும் நோக்கில் இது மாதிரியான நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்து வருகிறது.  

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close