[X] Close

கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்... சிசிடிவி காட்சி!

girl-injured-in-car-accident

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நெடுஞ்சாலையை இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது வேகமாக வந்த வாகனம் மோதி தூக்கியெறியப்படும் பதைபதைக்க வைக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


Advertisement

நாமக்கல்லை சேர்ந்த பிரியா என்ற பெண் மோகனூர்- வேலூர் செல்லும் சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக, வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இந்த காட்சி அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரியா கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஐந்து இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close