நாமக்கல் அருகே காதல் திருமணம் செய்து 7 மாதங்களே ஆன இளம்பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவர், மாமியாரை நாமக்கல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் அடுத்த தூசூர் பகுதியை சேர்ந்த கருப்பன், மணிமேகலை தம்பதியினரின் மகன் ரஞ்சித்(23). கொத்தனார் வேலை செய்து வரும் இவன் தனது உறவுகார பெண்ணான சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த சிந்துவை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு (17 வயதே நிரம்பிய நிலையில்) காதல் திருமணம் செய்துள்ளார். சிந்து கடந்த 27-ம் தேதி 18-வது பிறந்த நாளை ஒட்டி கணவர் ரஞ்சித்துடன் இணைந்து மதியம் கேக் வெட்டி உள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ரஞ்சித் வீட்டை விட்டு வெளியேறி விட மாலை வீட்டுக்கு வந்த போது சிந்து வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதனையடுத்து அருகில் உள்ளவர்களின் உதவியுடன் சிந்துவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிந்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சிந்துவின் தாய் பாப்பாத்தி கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்திடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிந்துவை திருமணம் செய்த போது அவருக்கு 18 வயது நிரம்பாமல் இருந்த நிலையில் அவரை குழந்தை திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து ரஞ்சித், அவரது தாய் மணிமேகலை ஆகியோரை குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்ட பிரிவு, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைப்படிக்க...”90 நாட்களுக்குப் பிறகு குழந்தையைப்போல நடக்கிறேன்” - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்