டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து லிட்டருக்கு 100 ரூபாயை கடந்திருக்கிறது. கடந்த 10 மாதங்களில் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
2021 ஜனவரி - ரூ. 81.71
பிப்ரவரி - ரூ.86.45
மார்ச் - ரூ.85.88
ஏப்ரல் -ரூ.85.75
மே -ரூ.89.90
ஜூன் -ரூ.93.72
ஜூலை-ரூ.94.39
ஆகஸ்ட்-ரூ.93.52
செப்டம்பர்-ரூ.94.45
அக்டோபர்-ரூ.100.59
சர்வதேச அளவில் ஏற்படும் கச்சா எண்ணெயின் நிலவரம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் எதிரொலித்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் வரி விதிப்பால் இதன் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகின்றன. ஏற்கனவே பெட்ரோல் சதம் கண்ட நிலையில் தற்போது டீசலும் செஞ்சுரி அடித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் டீசல் விலையில் ஏற்பட்ட மாற்றங்களை பார்க்கலாம்.
இந்த ஆண்டு ஐனவரி மாதம் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 79 ரூபாய் 21 காசுகளுக்கு விற்பனையானது. அதுவே பிப்ரவரி மாதம் இறுதியில் 7 ரூபாய் அதிகரித்து 86 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனை ஆயின. மார்ச் மாதத்தில் டீசல் விலை சற்று ஏற்றம், இறக்கம் கண்டு மாத இறுதியில் 85 ரூபாய் 88 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் 85 ரூபாய் 88 காசுக்களுக்கும், அதுவே ஏப்ரல் மாத முடிவில் 85 ரூபாய் 75 காசுகளுக்கும் விற்கப்பட்டது. மே மாதம் மேலும் 4 ரூபாய் விலை ஏற்றம் கண்ட டீசல், மாத இறுதியில் 89 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையானது.
ஜூன் மாதம் 3 ரூபாயும், ஜூலை மாதம் மேலும் 1 ரூபாய் விலை அதிகரித்து விற்பனையானது. ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் 94 ரூபாய் 39 காசுகளாக இருந்த டீசல் விலை அந்த மாத இறுதியில் சற்று குறைந்து 93 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனையானது. செப்டம்பரில் 94 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில் 94 ரூபாய் 74 காசுகளாக இருந்த டீசல் விலை தற்போது புதிய உச்சமாக 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்த்தால் டீசல் விலை சிறிது, சிறிதாக உயர்ந்து தற்போது வரை 20 ரூபாய் வரை விலை ஏற்றம் கண்டுள்ளது
டீசல் விலை உயர்வு லாரி ஓட்டுநர்களை கடுமையாக பாதித்துள்ளது. கால்டாக்ஸி, வாடகை கார் ஓட்டுநர்கள் என அனைவருக்குமான இந்த பாதிப்பு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?