[X] Close

மதரீதியான வன்முறை: நடவடிக்கை எடுக்க வங்கதேச பிரதமர் உத்தரவு

உலகம்

Prime-Minister-Sheikh-Hasina-has-ordered-Bangladesh-interior-minister-to-take-action-against-those-involved-in-religious-violence
மதரீதியான வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வங்கதேச உள்துறை அமைச்சருக்கு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார்.
 
இதுதொடர்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை சரிபார்க்காமல் நம்ப வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர், தூண்டுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக இந்து ஆலயங்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.
 

Advertisement

Advertisement
[X] Close