[X] Close

'புதுச்சேரியில் தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை' -உயர்நீதிமன்றத்தில் தகவல்

இந்தியா

Puducherry-government-said-There-is-no-local-body-election-in-Puducherry-UT-at-present-in-the-Chennai-High-Court

உள்ளாட்சித் தேர்தலை தற்போதைக்கு நடத்தப் போவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாக முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறு ஆய்வு செய்ய அறிவுறுத்த பட்டுள்ளதாகவும் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து வார்டுகள் ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய தலைமை நீதிபதி அமர்வு, அதுவரை வேட்பு மனுக்கள் பெறுவதை தள்ளிவைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close