Published : 02,Oct 2021 07:13 PM
“‘தல’ தோனியும், ‘தளபதி’ விஜயும் சேர்ந்திருப்பதை பார்த்ததில் மகிழ்ச்சி!” - வெங்கடேஷ் ஐயர்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடி வருகிறார் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர். இந்நிலையில், அண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜயும் இணைந்து எடுத்துக்கொண்ட படத்தை பார்த்து மகிழ்ச்சியில் ட்வீட் செய்துள்ளார் வெங்கடேஷ் ஐயர்.
“இது எப்போது நடந்தது? ஒரே படத்தில் எனது மனம் கவர்ந்த இரண்டு ஐகான்களான தோனியும், விஜயும் இருப்பதை பார்த்ததில் மகிழ்ச்சி. நிச்சயம் வருண் சக்கரவர்த்தியை போல நானும் நடிகர் விஜயை ஒருநாள் பார்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தை எதிர்நோக்கி காத்துள்ளேன்” என ட்வீட்டில் தெரிவித்துள்ளார் வெங்கடேஷ்.
இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா அணிக்காக 193 ரன்களை சேர்த்துள்ளார்.