[X] Close

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை தள்ளிவைக்க நீதிமன்றம் உத்தரவு

இந்தியா

Court-orders-postponement-of-candidature-for-Puducherry-local-body-elections

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4 ம் தேதிக்கு தள்ளிவைக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் 10 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக  அறிவிப்பு  வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கு முறையான ஒதுக்கீடு வழங்கப்படாததால் இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி  முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை சட்ட மன்ற உறுப்பினர் பிரகேஷ் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Madras High Court - Wikipedia


Advertisement

அப்போது, தேர்தல் ஆணைய அறிவிப்பில், பட்டியலினத்தவர்களுக்கு வார்டுகள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்றும் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்காமல்  குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்கி உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த தவறுகளை சரி செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது என தெரிவித்த நீதிபதிகள்,வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4 ம் தேதிக்கு தள்ளிவைக்க உத்தரவிட்டனர். மேலும்,மனுவுக்கு பதில் அளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கு, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளிவைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close