[X] Close

”என்னை நன்றாக வழிநடத்தினீர்கள் அர்ஜுன் சார்”: எலிமினேட் ஆன இந்திரஜாவின் முதல் பதிவு

சினிமா

You-guided-me-well-Arjun-sir-says-robo-shankar-daughter-indraja

”என்னை நன்றாக வழிநடத்தினீர்கள் அர்ஜுன் சார்” என்று சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

உலகம் முழுக்க ஹிட் அடித்த சர்வைவர் நிகழ்ச்சி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் தொடங்கியது. விக்ராந்த், இந்திரஜா, லட்சுமி பிரியா, நந்தா, பார்வதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தென்னாப்பிரிக்க தீவில் நடைபெறும் இந்த ரியாலிட்டி ஷோவில், நடிகர் ரோபோ ஷங்கர் மகளும் நடிகையுமான இந்திரஜா எலிமினேட் செய்யப்பட்டார்.

image


Advertisement

தனது மகள் போட்டியிலிருந்து வெளியேறியபிறகு விமான நிலையத்தில் வரவேற்ற ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “தோத்தாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்குடா பாப்பா” என்று மகளுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். அதோடு,  போட்டியிலிருந்து வெளியேறியபிறகு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முறையாக இன்று மனம் திறந்திருக்கிறார் இந்திரஜா.

image

அந்தப் பதிவில், “சர்வைவர் நிகழ்ச்சியின் பயணத்திற்கு உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி மக்களே. நீங்கள் இல்லாமல் என்னால் இதைச் செய்ய முடிந்திருக்காது. என்னையே பரிசோதித்துக்கொள்ள ஜீ தமிழ் இந்த வாய்ப்பை வழங்கியது. அர்ஜுன் சார் நீங்கள் என்னை சரியாக வழிநடத்தினீர்கள்.


Advertisement

image

என் இணைப் போட்டியாளர்கள் அனைவரும் என்னுடைய ப்ளஸ் மைனஸ் அனைத்தையும் கற்றுக்கொடுத்து நன்றாக கவனித்துக்கொண்டீர்கள். நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு பின்னால் இருக்கும் எனது குடும்பத்திற்கு நன்றி. குடும்பத்தோட அருமை தெரியணும்னா சர்வைவர் நிகழ்ச்சிக்கு போய்ட்டு வாங்க” என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close