[X] Close

புதுச்சேரி: கொலையில் முடிந்த கொடுக்கல் வாங்கல் - இருவர் கைது

குற்றம்

Two-youths-have-been-arrested-in-connection-with-the-murder-of-a-farmer-in-Pondicherry-
புதுச்சேரியில் விவசாயி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை இரு தினங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக முருகனின் மனைவி அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முருகனின் எதிர்வீட்டில் வசிக்கும் சண்முகம் மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது.
 
image
இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பணம் கொடுக்கல் வாங்கலில் முருகனின் மனைவி அலமேலு, சண்முகத்தின் தாயாரிடம் தகராறில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
 

Advertisement

Advertisement
[X] Close