[X] Close

"சீனியருக்கு ரூ60,000"..டொமஸ்டிக் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய ஜெய் ஷா

விளையாட்டு

BCCI-Secretary-Jay-Shah-announced-that-the-match-fees-for-domestic-cricketers-was-hiked

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவின் அறிவிப்பு ஒன்று உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்வை தந்துள்ளது. அதாவது உள்நாட்டு கிரிக்கெட் (domestic cricket) போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்துவதாக அவர் அறிவித்துள்ளது தான் வீரர்களின் மகிழ்ச்சிக்கு அடிப்படை காரணம். 


Advertisement


Advertisement

“நான் மகிழ்ச்சியுடன் இந்த அறிவிப்பை தெரிவித்துக் கொள்கிறேன். டொமஸ்டிக் கிரிக்கெட் வீரர்களுக்கான மேட்ச் ஃபீஸ் உயர்த்தப்பட்டுள்ளது. 40 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள சீனியர் வீரர்களுக்கு 60,000 ரூபாயும், 23 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 25,000 ரூபாயும், 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 20,000 ரூபாயும் வழங்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடக் கூடிய திறன் படைத்த வீரர்களை அடையாளம் காண உதவுவது டொமஸ்டிக் கிரிக்கெட் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்கலாம் : அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close