[X] Close

டி20 போட்டிகளில் விராட் கோலியின் மிரள வைத்த சில ஆட்டங்கள் - ஒரு தொகுப்பு

சிறப்புக் களம்

Virat-Kohli-Best-T20I-Knocks-for-India-for-over-the-years

துபாயில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 கேப்டன் பதவியை விராட் கோலியிலிருந்து விலகுவதாக விராட் கோலி தெரிவித்துள்ள நிலையில் இந்த "ஷார்டர் பார்மெட்" கிரிக்கெட்டில் அவருடைய 4 சிறந்த இன்னிங்ஸை இப்போது பார்க்கலாம்.


Advertisement

image

86 vs ஆஸ்திரேலியா, டி20 உலகக் கோப்பை, 2016


Advertisement

விராட் கோலி எனும் மேட்ச் வின்னரை இந்தப் போட்டியில் உலகுக்கு அறிமுகமாக்கியது இந்தப் போட்டி என்றால் மிகையல்ல. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 162 ரன்களை சேர்த்து. அடுத்து விளையாடிய இந்திய அணி 49 ரன்களுக்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது மைதானத்துக்குள் நுழைந்த கோலி ஒரு அற்புதமான இன்னிங்ஸை "பில்ட்" செய்தார். முதலில் நின்று விளையாடிய கோலி, பின்பு ஓவர்கள் குறைய குறைய ரன்களை குவிப்பதில் வேகம் காட்டினார். ஆஸ்திரேலிய பவுலரான ஜேம்ஸ் பால்க்னரின் ஒரே ஓவரில் 19 ரன்களை எடுத்தார். அடுத்து நாதன் கூல்டர் நைல் ஓவரில் 16 ரன்களை சேர்த்தார். முடிவில் இந்தியா பிரமாதமான வெற்றியை வசமாக்கியது.

image

94 vs வெஸ்ட் இண்டீஸ், ஹைதராபாத், 2019


Advertisement

ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இமாலய இலக்கான 208 ரன்களை எடுத்தது. இந்தப் போட்டியில் அதிகப்படியான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய கோலி, எதிரணி பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பலர் விராட் கோலியை சீண்டினர். ஆனால் அவர்களுக்கு தனது பேட்டிங்கில் வெச்சு செய்து பதிலடி கொடுத்தார். முடிவில் 208 இலக்கை இந்தியா எடுத்து வெற்றிப்பெற்றது. 94 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்தார் விராட் கோலி.

image

70 vs வெஸ்ட் இண்டீஸ், மும்பை, 2019

டி20 தொடரை தீர்மானிக்கும் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 135 ரன்களை சேர்த்தது இந்தியா. இதன் பின்பு களமிறங்கிய கோலி சரமாரியாக விளாசினார் 29 பந்துகளில் 70 ரன்களை சேர்த்தார். இந்தப் போட்டியில் கோலியின் ஸ்டிரைக் ரேட் 241.37 என அசத்தலாக இருந்தது. கோலியின் அதிரடியால் 20 ஓவரில் இந்தியா 240 ரன்களை எடுத்தது. பின்பு இந்தப் போட்டியில் இந்தியாவும் வெற்றிப்பெற்று தொடரையும் கைப்பற்றியது.

image

72 vs தென்னாப்பிரிக்கா, டி20 உலகக் கோப்பை, 2014

2014 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் மோதியது. இதில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 173 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது. சேஸிங்கின் போது முதல் 10 ஓவரில் சுமாராக விளையாடிய இந்திய அடுத்த 10 ஓவரில் கோலியின் விஸ்வரூபத்தில் கெத்து காட்டியது. விராட் கோலி 72 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் தன்னுடைய கடைசி 55 ரன்களை 28 பந்துகளில் எடுத்தார். இந்தியாவும் வெற்றிப்பெற்றது.


Advertisement

Advertisement
[X] Close