[X] Close

ஓடியன் ஸ்மித் வேகத்தில் இரண்டாக உடைந்த கிறிஸ் கெயிலின் பேட் - வீடியோ

விளையாட்டு

Odean-Smith-bowls-a-ripper-to-break-Chris-Gayle-bat-into-two-at-CPL

கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் ஓடியன் ஸ்மித் வேகத்தில் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் மட்டை இரண்டாக உடைந்து கைப்பிடி, மட்டை என இரண்டாக உடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

image

கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. செயிண்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியட்ஸ் மற்றும் அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் கிறிஸ் கெயில் செயிண்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கினார் அந்த அணிக்கு டுவைன் பிராவோ கேப்டனாக இருக்கிறார்.


Advertisement

4வது ஓவரில் ஓடியன் ஸ்மித் ஒரு பந்தை வேகமாக வீச அதனை கெய்ல் அடித்த போது அவரது மட்டை ஹேண்டில் தனியாக மட்டை தனியாக இரண்டாக உடைந்தது. கெய்ல் வெறும் பேட் ஹேண்டிலுடன் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்த காட்சி தான் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.


Advertisement

முதலில் பேட்டிங் செய்த அமேசான் வாரியர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஹேட்மயர் 20 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய செயிண்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி 17.5 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்து அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.


Advertisement

Advertisement
[X] Close