Published : 15,Sep 2021 03:50 PM
“பஞ்சமி நிலங்கள் மீட்பு குறித்து தமிழக முதலமைச்சரிடம் மனு கொடுத்துள்ளோம்” - திருமாவளவன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறினார்.
மேலும் திருமாவளவன் பேசும்போது, “சிறையில் வாடும் 7 தமிழர் விடுதலை குறித்து தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும். கூட்டணி கட்சிகள் என்ற முறையில் நாங்களும் அதனை வலியுறுத்துவோம்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, விடுதலை சிறுத்தைகள் மற்றும் சில ஜனநாயக சக்திகள் இணைந்து தொடர்ந்து வலியுறுத்துவோம். தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் அமர்நாத்தை திரும்பவும் தமிழகம் அழைத்து வந்ததை வரவேற்கிறோம். அவரது வரவு நம்பிக்கை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம் : வசூலில் ஏமாற்றிய 'பெல்பாட்டம்', 'தலைவி'... பாலிவுட்டுக்கு என்ன சொல்கிறது 'பாக்ஸ் ஆஃபிஸ்'?