[X] Close

9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் - தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு

local-body-election-date-announced

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்பது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


Advertisement

இது தொடர்பாக பேசிய அவர், ''செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.

அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும்.


Advertisement

image

நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும்'' என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் 9 மாவட்டங்களில் மட்டும் 2019ல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close