[X] Close

“தந்தைபோல் பேசி தொல்லை கொடுத்தார்” - தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்

வீடியோ ஸ்டோரி

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜன் ஒரு தகப்பனைப் போல பேசி பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.


Advertisement

தடகள பயிற்சியாளர் நாகராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாகராஜனால் நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து வீராங்கனைகள் அளித்துள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வீராங்கனைகள் சிலர் நாகராஜனால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து அளித்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நாகராஜன் சிறப்பு பயிற்சி அளிப்பதாக கூறி, உடலுக்கு மசாஜ் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக தேசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த வீராங்கனை ஒருவருக்கு நாகராஜன் கொடுத்த பாலியல் தொல்லையால், அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், மற்றொரு வீராங்கனைக்கு நரம்பு பிரச்சனை ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

பாலியல் தொல்லைக்கு உள்ளான வீராங்கனை ஒருவர் தற்போது வரை திருமண உறவில் ஈடுபட முடியாத நிலையிலும், ஆண்களை கண்டால் அஞ்சும் வகையில் மன ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுவது கொடுமையின் உச்சம். 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த வீராங்கனையிடம் தந்தை போல் பேசி, பயிற்சிக்குப் பிறகு காத்திருக்கச் சொல்லி நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தன்னை அவர் கடவுள் எனக்கூறி பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது பாதிக்கப்பட்ட மற்றொரு வீராங்கனையின் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் பெற்றோரிடம் சொல்ல பாதிக்கப்பட்டவர்கள் தயங்கியுள்ளனர். "புகார் கொடுக்க பெற்றோர், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். பயிற்சியாளர் தான் குற்றவாளியே தவிர, குழந்தைகள் அல்ல”  என குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன் தெரிவித்துள்ளார்.  

நாகராஜனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பெண்களின் கோரிக்கையாக உள்ளது. 


Advertisement

இதையும் படிக்கலாம் : மைதானத்தில் விராட் கோலி செய்த செயல் : நெகிழும் நெட்டிசன்கள்


Advertisement

Advertisement
[X] Close